வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு..!

பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 அலகுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொத்தம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் இருக்கும் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 20-ம் தேதி இரண்டாம் நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏற்கெனவே 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 2-ம் நிலையின் முதல் அலகிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஒரே நேரத்தில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மொத்தம் 1200 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 2 அலகுகளிலும் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின்நிலைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மின் உற்பத்தி துவங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அனல் மின்நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: