அதிவேக சூப்பர் பைக்குகளை தடை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: விபத்துகளை தடுக்க இரு சக்கர ஊர்திகளிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதிவேக இரு சக்கர ஊர்திகளில் சாகசம் செய்யும் தாகத்துடன் பயணிக்கும் இளைஞர்கள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வரும் நிலையில், இது மிகவும் பயனளிக்கக் கூடியதாகும். உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழும் நாடு இந்தியா தான். இந்தியாவில் அதிக விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். சூப்பர் பைக்குகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இளைஞர்களை இயக்க அனுமதிப்பதும் விபத்துக்கு காரணம் ஆகும். பந்தயம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தேவைகளை தவிர வேறு பயன்பாடுகளுக்கு அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான விதிகளை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: