கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் 28 முதல் பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோ-வின் ஆப்பில் வரும் 28ம் தேதி முதல் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த ஜனவரி 14ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோரும் மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. தடுப்பூசி போடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கோ-வின் இணையத்தில் வருகிற 28ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு ேநற்று அறிவித்தது.

இதற்கான நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கு முன் பயன்படுத்தப்படும் நடைமுறையே தொடரும். இணையத்தில் கோ-வின் ஆப்பில் வயது வரம்பு உள்ளிட்ட சில குறிப்பிட்ட புதிய அம்சங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. தனியார் மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் ரூ.250க்கு போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டின் விலையை சீரம் நிறுவனம் நேற்று முன்தினம் உயர்த்தியதால், இந்த புதிய விலையே வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. கோவாக்சின் விலை நிலவரம் பிறகு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>