செக் மோசடி வழக்கு சரிதா நாயர் கைது: சிறையில் அடைக்க உத்தரவு

திருவனந்தபுரம்:  கேரளா, தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் கோடி கணக்கில் மோசடி செய்த வழக்கில், கேரள மாநிலம், செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக சேலம், கோவை, நெல்லை உள்பட பல்வேறு காவல் நிலைங்களிலும் வழக்குகள் உள்ளன.இந்நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பெற்ற பணத்துக்கு ரூ.42 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலை கொடுத்தார்.

அது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து, அவருக்கு பணம் கொடுத்தவர் கோழிக்கோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும், சரிதா நாயர் ஆஜராகவில்லை. இதனால், அவரை கைது செய்யும்படி கோழிக்கோடு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதன்படி, கோழிக்கோடு போலீசார் நேற்று காலை சரிதா நாயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>