ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 9,716 பேர் பாதிப்பு: 38 பேர் பலி...!!!

ஐத்ராபாத்: ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும் மாலை அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

 * ஆந்திராவில் மேலும் 9,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,86,703 ஆக அதிகரித்துள்ளது.

* ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மேலும் 3,359 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,18,985 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* ஆந்திராவில் கொரோனாவால் இன்று மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 7,510 ஆக உயர்ந்துள்ளது.

* ஆந்திராவில் தற்போது வரை கொரேனாவால் பாதிக்கப்பட்டு 60,208 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>