நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா

பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் வழக்கில் கைதாகி, 120 நாட்கள் சிறையில் இருந்து விடுதலையானவர், நடிகை சஞ்சனா கல்ராணி. கடந்த சில நாட்களாக அவருக்கு சளித்தொல்லையும், மூச்சுத்திணறலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சனா கல்ராணி  கூறுகையில், ‘தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். என் வீட்டில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். கொரோனா வாரியர்சான அவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினர் என்றாலும், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது.  விரைவில் குணமடைவேன் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்’ என்றார்.

Related Stories:

>