தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி? பேஸ்புக் பயனர்களுக்கு மத்திய அமைப்பு டிப்ஸ்: தேவையற்ற நபர்கள் பார்ப்பது கடினம்

புதுடெல்லி: தனிநபர் தகவல்கள் உலகளவில் கசிந்து வருவதால், தங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்படி, இந்திய பேஸ்புக் பயனாளர்களை சிஆர்இடி கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக வலைதளங்களில் உள்ள தனிநபர் தகவல்கள் உளலகளவில் கசிந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் 5.62 லட்சம் இந்தியர்கள் உள்பட உலகளவில் 8.7 கோடி பேஸ்புக் பயனாளர்களின்  தகவல்கள் திருடப்பட்டதாக, இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் கூறியது. இந்நிலையில், சமீபத்தில் 61 லட்சம் இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து 4.5 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, இது குறித்து இணையவழி குற்றப் பாதுகாப்பு அமைப்பான சிஇஆர்டி வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  பேஸ்புக் பயனாளர்களின் பெயர், புகைப்படம்,  பதவி, கைபேசி எண்கள், பிறந்த தேதி, உள்ளிட்ட சுயவிவரங்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் உலகளவில் திருடடுப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், நிதி, சுகாதாரம், பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்கள் பகிரப்படவில்லை என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த விவரங்கள் பல்வேறு இணைய குற்றங்களில் ஈடுபடுவோரின் இணையங்களில் இலவசமாக பொதுவெளியில் கிடைக்கும்படி வெளியிடப்படுகிறது. இத்தகவல்கள் கான்டக்ட் இம்போர்ட்டர்’ என்ற அம்சத்தின் கீழ் ஒருவரது போன் நம்பர் மூலம் மற்றவர்களால் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, பேஸ்புக் பயனாளர்கள் தங்களின் சுயவிவரங்கள் குறித்த தகவல்களை பிரைவேட் செட்டிங்’கில் சென்று யார் பார்க்கலாம், தொடர்பு கொள்ளலாம் என்ற பிரிவில் நண்பர்கள்’ என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம், தேவையற்ற நபர்கள் தங்களின் சுயவிவரங்களை பார்ப்பது, தவறாக பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், உங்களை பற்றிய போன் நம்பர் உள்ளிட்ட எந்தெந்த தனிப்பட்ட தகவல்களை பிறர் பார்க்கலாம் என்பதையும் தேர்வு செய்து தனிநபர் தகவல் மற்றும் கணக்கு பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: