மத்திய அரசின் உதவி காலத்தின் கட்டாயம் தொழிலாளர்கள் வங்கி கணக்கில்தயவு செய்து பணம் போடுங்கள்: ராகுல், பிரியங்கா வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி உதவி செய்ய வேண்டும்,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். தலைநகர் டெல்லியில் கொரோனா 4வது அலை தாக்கி வருவதால், தினசரி பாதிப்பும், பலியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் இங்கு 6 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் திரண்டு இருக்கின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கி இருக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனால், பொதுமக்கள் கொரோனா வைரசை பரப்புவதாக குற்றம்சாட்டும் மத்திய அரசானது, இதுபோன்ற பொதுமக்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கையை எடுக்குமா?’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இதுதான் உங்கள் திட்டமா? அரசின் கொள்கைகள் ஒவ்ெவாருவரையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஏழைகள், தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி என்பது காலத்தின் தேவையாகும். தயவு செய்து அதனை செய்யுங்கள்,’ என கூறியுள்ளார். இதேபோல், மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி மருந்து கிடையாது. எந்த விலை கட்டுப்பாடும் இன்றி இடைத்தரகர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஏழை சமூகத்தினருக்கு கொடுரோனா தடுப்பூசி கிடைக்கும் என உத்தரவாரம் இல்லை. மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி பாகுபாடு என்பது விநியோகம் கிடையாது. என்றும் பிரியங்கா சாடியுள்ளார்.

Related Stories:

>