மோடி பதவி விலக கோரி ஹேஷ்டேக்: டிரெண்டிங்கில் நம்பர் 1

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்படுவோர், பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பதவி விலக வேண்டுமென நெட்டிசன்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக்கை நேற்று உருவாக்கினர். இது ஏராளமானோரால் பார்த்து, பகிரப்பட்டு வருகிறது. இதனால் பதவி விலகுங்கள் மோடி என்ற ஹேஷ்டேக்  டிவிட்டர் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பெற்றது.

Related Stories:

>