கொரோனா தொற்றுக்கு எதிராக சுகாதார பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு ரத்து

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சேவையாற்றி வரும் சுகாதார பணியாளர்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக போராடி வரும் சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.50லட்சம் காப்பீட்டு திட்டமானது கடந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக கொரோனா தடுப்பு பணியில் சுகாதார ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு இந்த காப்பீடு தொகை சென்றடையும். இந்நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவில்,‘‘இதுவரை 287 பேருக்கு காப்பீடு தொகையை நிறுவனம் வழங்கி இருக்கின்றது. கரீப் காப்பீடு திட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ள தொகுப்புக்கள் ஏப்ரல் 24ம் தேதி வரை தீர்த்து வைக்கப்படும். அதன் பின்னர் புதிய காப்பீடு கொள்கை நடைமுறைக்கு வரும். இது தொடர்பாக நியூ இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் மத்திய அரசு பேசி வருகின்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

* நன்றியற்றவர்

மத்திய அரசின் இந்த அறிக்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி ஊடக அறிக்கைகளை சுட்டிக்காட்டி தனது டிவிட்டர் பதிவில்,‘‘மத்திய அரசே நீங்கள் முற்றிலும் நன்றியற்றவர். கொரோனா இரண்டாவது அலை தாக்கியுள்ள நிலையில் சுகாதார பணியாளர்கள் அரசு காப்பீடு இன்றி இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: