சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சித்தூர் : சித்தூர் மாநகரத்தில் ஏராளமான பகுதிகளில் உள்ள கழிவுநீர் முழுவதும் நீவா நதியில் கலக்கப்படுகின்றது. இதனால், நீவா நதியில் உள்ள கரையோரமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் பெரும் அவதிப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் நீவா நதி கரையோரம் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சுத்தமான நீரை பாய்ச்சி வந்தனர். தற்போது கழிவுநீர் கலந்து வருவதால் அவர்கள் பயிரிடப்படும் பயிர்களுக்கு சுத்தமான நீர் கிடைக்காமல் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், சித்தூர் மாநகரம் முழுவதும் உள்ள கழிவுநீர்களை நீவா நதியில் கலக்கப்படுகிறது.

இதனால், நதி கரையோரம் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுத்தமான நீரை பருக முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லை மற்றும் துர்நாற்றம் அதிகரிக்கிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு சித்தூர் மாநகரம் முழுவதும் வரும் கழிவுநீர்களை வேறொரு பகுதிக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>