கால்நடை தீவன ஊழல் கடைசி வழக்கிலும் ஜாமீன் வீட்டுக்கு செல்கிறார் லாலு: பல மாத இழுபறிக்குப் பிறகு தீர்ப்பு

டேராடூன்: கால்நடை தீவன ஊழல் சம்பந்தப்பட்ட 4வது வழக்கிலும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டதால், அவர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யா தவ். இவர், பலமுறை பீகார் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் தண்டனை விதிக்கப்பட்ட அவர்,  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 4 வழக்குகளி–்ல 3ல் ஏற்கனவே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது. தும்கா கருவூலத்தில் இருந்து முறைகேடாக ரூ.3.13 கோடியை எடுத்து கையாடல் செய்தது தொடர்பான வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருந்தது. பலமுறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது.

கடைசியாக, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரியில் இதை விசாரித்த நீதிபதி அப்ரேஷ் குமார், ‘இந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையில் பாதி நாட்களை சிறையில் கழித்த பிறகே, ஜாமீன் மனுவை விசாரிக்க முடியும்,’ என்று தெரிவித்தார். அதன்படி, லாலு தனது  தண்டனையில் பாதி நாட்களை அனுபவித்த நிலையில், நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், லாலுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்மூலம், அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து இருப்பதால், அவர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு  சிகிச்சை பெற்று வருகிறார்.

லாலுவுக்கு நிபந்தனை

நீதிபதி அப்ரேஷ் குமார் தனது தீர்ப்பில், ‘ஜாமீன் காலத்தில் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது. செல்போன் எண்ணையும், வீட்டு முகவரியையும் மாற்றக் கூடாது,’ என்று லாலுவுக்கு நிபந்தனை விதித்தார்.

Related Stories:

>