புதுவேட்டக்குடி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்

குன்னம்: குன்னம் தாலுகா புதுவேட்டக்குடி கிராமத்தில் இரண்டாவது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வார்டில் உள்ள தெருக்களில் கழிவு நீர் வாய்க்கால் மற்றும் சாலை வசதி வேண்டிமாவட்ட நிர்வாகம் மற்றும் குன்னம் தாசில்தார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஆகியோரிடம் பல முறை மனு அளித்தும் வலியுறுத்தியும் வந்தனர். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 3 மணியளவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திட்டக்குடி அரியலூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் வந்தால் தான் கலைவோம் என உறுதியாக இருந்தனர். ஆனால் மாலை ஐந்து மணி வரை ஊராட்சி நிர்வாகம் மற்றும் தாசில்தார் , யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் சாலையில் படுத்தும் சாலையிலே சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தினர். இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், டி.எஸ்.பி. சீராளன், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் வசிக்கும் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த பகுதியில் உடனடியாக கழிநீர் வாய்கள் அமைத்து புதிய சாலை அமைத்து தருவதாக உறுதியளித்தன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர் இதனால் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post புதுவேட்டக்குடி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: