அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில் தான் நிலை கொண்டுள்ளது. ஆகவே, அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்வதோடு, ஒரு சார்பின்மை மற்றும் நடுநிலை கடைபிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>