உங்க ரத்தத்துக்கு என்ன டயட்?

பிளட் டைப் டயட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒவ்வொருவகை ரத்தப் பிரிவினரும் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பதுவே ப்ளட் டைப் டயட். இதை பீட்டர்  ஜே டி அடமோ என்ற இயற்கை மருத்துவர் வடிவமைத்தார்.

ஓ ரத்தப் பிரிவுக்கான டயட்: இவர்கள் புரோட்டீனை நன்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், கோழி, காய்கறிகள், பால் பொருட்கள் ஆகியவற்றில் இருக்கும் உயர்தர புரோட்டீன் இவர்களுக்கானது.  வயிற்றுக்கோளாறுகள் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் என்பதால் சிலவகையான ஊட்டச்சத்துக்களையும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏ ரத்தப் பிரிவுக்கான டயட்: இவர்கள் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏ ரத்தப் பிரிவினரின் நோய் எதிர்ப்பு  மண்டலம் மிகுந்த சென்சிடிவ் தன்மை உடையது என்பதால் உண்ணும் உணவில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

பி ரத்தப் பிரிவுக்கான டயட்: இவர்கள் மக்காச்சோளம், கோதுமை, மைதா, தக்காளி, வேர்க்கடலை, எள் ஆகியவற்றை அளவாகச் சாப்பிட வேண்டும். கோழியும் இவர்களில் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. பச்சைக் காய்கறிகள், முட்டை, மீன், ஆடு, கொழுப்புச்சத்துக் குறைவான பால் பொருட்கள் ஆகியவற்றை நன்கு சாப்பிடலாம்.

ஏபி ரத்தப் பிரிவுக்கான டயட்: டோபு, கடல் உணவுகள், பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகள் ஆகியவை இவர்களுக்கு ஏற்றது. ஏபி ரத்தப் பிரிவினருக்குப் பொதுவாக, வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு  கொஞ்சம் குறைவாகவே இருக்கும். எனவே, காபி, ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பதே நல்லது. இந்த டயட் ஆரோக்கியமான நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். சர்க்கரை நோய் உள்ளிட்ட நாட்பட்ட  நோய் உள்ளவர்களுக்கானது இல்லை. மருத்துவர் ஆலோசனையோடு இதைப்பின்பற்றுவது நல்லது.

Related Stories:

>