கடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் மாஸ்க் அணியாதவர்களின் சதவீதம் அதிகரிப்பு

சென்னை: கடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் மாஸ்க் அணியாதவர்களின் சதவீதம் அதிகரிப்பு, மேலும் 9 மால்களில் ஆய்வு செய்த போது 51% பேர் முறையாக மாஸ்க் அணியவில்லை, இதையடுத்து சென்னையில் மாஸ்க் பயன்பாடு குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும் என்று மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதையும் மீறி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் நடமாட்டனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது. மேலும் மக்களிடம் கொரோனா தொற்று குறித்து பயம் இல்லாத காரணத்தினால் நிறைய பேர் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தனர். இதையடுத்து ஐ.சி.எம்.ஆர் சார்பில் கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள 9 ஷாப்பிங் மால்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 51 சதவீதம் பேர் முறையாக மாஸ்க் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சென்னையில் முறையாக மாஸ்க் அணியாதவர்கள் சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோன்று குடிசைப்பகுதியில் 79 சதவீதம் பேர், மற்ற பகுதிகளில் 70 சதவீதம் பேர் மக்கள் முறையாக மாஸ்க் அணிவதில்லை. இந்த ஆய்வின்படி சென்னையில் முறையாக மாஸ்க் அணியாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும் கடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் சென்னையில் முறையாக மாஸ்க் அணியாதவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.

Related Stories: