அதிமுக தேர்தல் அறிக்கையை மறுக்கும் வகையில் சிஏஏ சட்டத்தை திரும்ப பெற முடியாது: பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புது குண்டு

சென்னை: பாஜ தேசிய செயலாளர் ஜெ.பி.நட்டா சென்னை கிண்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் தெளிவான கூட்டணியை அமைத்துள்ளோம். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தகளிலும் பாஜவின் வெற்றி உறுதியாகி உள்ளது. அசாமில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். புதுச்சேரியிலும் ஆட்சியைப் பிடிக்க உள்ளோம். கேரளாவிலும் நல்ல வெற்றியைப் பெறுவோம்.  புதுச்சேரியில் என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் தே.ஜ.கூ. ஆட்சி அமைக்கும், கேரளாவில் பலமான சக்தியாக உருவெடுத்துள்ளோம். தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக உள்ள பிரதமர் மோடியின் செயல்பாடுகளை தமிழக மக்கள் விரும்புகின்றனர். சிறந்த தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும்.

சிஏஏ சட்டம் திரும்ப பெருவதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக நாங்கள் அவர்களிடம் பேசுவோம். திரும்ப பெற முடியாது, எங்களது முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே வருமானவரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும், கட்டிடத்தை வடிவமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. நிலம், மண் பரிசோதனை மேற்கொள்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, கட்டடப்பணி தொடங்கும். எய்ம்ஸ் மருத்துவமனை மிகப்பெரிய திட்டம். அதனால் காலதாமதமாகிறது. இவ்வாறு பேசினார்.

Related Stories: