யூடியூபில் இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து சாதனை படைத்த ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு பாடல்

சென்னை: 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வின் பரப்புரை பாடலான ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு பாடலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் வௌியிட்டார்.  இணையத்தில் இந்த பாடலை திமுக வினர் மட்டுமின்றி பொதுமக்களும் விரும்பி பார்த்து வருகின்றனர், மேலும் மாநிலம் முழுவதும் திமுகவினரின் பிரச்சாரத்திலும் இந்த பாடல் ஒலித்து வருகிறது.  இந்த நிலையில் இணையத்தில் இந்த பாடலை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதற்கு முன்பு பல்வேறு கட்சிகளும் பிரச்சாரப்பாடலை வெளியிட்டுள்ளனர், ஆனால் அந்த பாடல்களை தாண்டி 5 கோடி என்ற இமாலய சாதனையை நிகழ்த்துள்ளது.

Related Stories: