தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என மெகபூபா பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனால், ‘முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட் வைத்திருப்பது தேசத்திற்கு அச்சுறுத்தலா?’ என மெகபூபா கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதோடு, இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெகபூபா தனது பதிவில், ‘‘பாஸ்போர்ட் அலுவலகம் சிஐடி அறிக்கையின் அடிப்படையில் பாஸ்போர்ட்டை வழங்க மறுக்கின்றது. முன்னாள் முதல்வர் வைத்திருக்கும் பாஸ்போர்ட்டானது தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்று கூறப்படுகின்றது. இது தான் 2019ம் ஆண்டுக்கு பின் காஷ்மீரில் திரும்பிய இயல்பு நிலை” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: