தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பி போட்டியிடுகிறார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.ராமச்சந்திரனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது, மீண்டும் தனது சொந்த தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் வாழ்வா, சாவா என களம் இறங்கியுள்ளார். இதனால் எப்படியும் வெற்றி கனியை பறித்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். தொகுதி முழுவதும் பிரசாரத்திற்கு போகும் இடமெல்லாம் ஆரத்தி எடுக்கும் பெண்கள், பிரசாரத்தில் கூடும் பெண்கள் என அனைவருக்கும் தலா 200 வழங்கி வருகிறாராம்.