அரூர்: அரூர் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, சப்பாணிப்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், 1000 ஏக்கரில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். 2 மாத பயிரான முள்ளங்கி பயிரிட ஏக்கருக்கு ரூ.18ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது முள்ளங்கி அறுவடை சீசன் என்பதால், வரத்து அதிகரித்துள்ளது. மொத்த விலையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.100க்கு வாங்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.2 முதல் விற்பனை செய்யப்படுகிறது.