எஸ்ஆர்எம்யூ கண்ணையா மகன் வீட்டில் ரெய்டு

சென்னை: பெரம்பூர் சிறுவள்ளூர் சாலையில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) சங்க பொது செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் வீடு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் படையினர் பிரகாஷின் வீட்டுக்குள் நுழைந்து, சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சில ஆவணங்களை மட்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பிரகாஷ் சொந்தமாக பாலாஜி குளோபல் சொல்யூஷன் என்ற பெயரில் ஐடி கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் 3 மணி நேரம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

கடந்த 3 நாட்களுக்கு முன் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், தற்போது அதன் பொது செயலாளரின் மகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: