தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக கரூர் - 487, கோவை - 365, திருப்பூர் - 131, சென்னை - 130 புகார்கள் வந்துள்ளன. 2,313 புகார்களில், 1,670 புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தபாலில் வாக்களிக்க 80 வயதுக்கும் மேற்பட்ட 1.51 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளில் 45,868 பேர் தபாலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் 28-ம் தேதி தமிழகம் வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: