தோய்த்து செய்!

தோசையும் கல்தோன்றா மண்தோன்றா காலத்து உணவுதான் போலிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கிய நூல்களிலேயே கூட தோசை பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ‘தோய்த்து செய்’ என்பதுதான் ‘தோய் + செய்’ என சுருங்கி தோசை ஆயிற்று என்கிறது எட்டாம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு.உணவு வரலாற்று நிபுணர் அசயா, “தமிழகத்து தோசை அந்தக் காலத்தில் வெறும் அரிசி மாவால் மட்டுமே செய்யப்பட்டது. உளுந்து கலக்கவில்லை” என்கிறார். பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘மனசொல்லசா’ என்ற கன்னட நூலில் ‘தோசகா’ என்கிற உணவு குறிப்பிடப்

படுகிறது.இது முழுக்க முழுக்க உளுந்தில் செய்யப்படுவது. அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து அம்மாக்கள் சுடும் தோசையின் பூர்வீகம் கர்நாடகம்தானாம். குறிப்பாக உடுப்பி பகுதியில்தான் இன்றைய தோசை உருவானது என்கிறார்கள். உடுப்பி ஹோட்டல்களில் இன்றும் விதவிதமான தோசைகள் பரிமாறப்படுகின்றன என்பதையும் கவனியுங்கள். அரிசி மாவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உளுந்தில் உள்ள புரதச்சத்தும் தோசையில் இணைந்திருக்கின்றன. மேலும், மாவு புளிக்கவைக்கப்படுவதால் வைட்டமின் பி மற்றும் சி  சிறப்பாக உருவாகிறது.

Related Stories:

>