குப்பைமேடு பிரச்னைக்கு தீர்வு: என்.ஆர்.தனபாலன் உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்தனபாலன் போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுனஐம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி  நேற்று, கொடுங்கையூர் பார்வதி நகர், எவரெடி காலனி மற்றும் மணலி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது என்.ஆர்.தனபாலன் பேசுகையில், ‘கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். குப்பை லாரிகளால் அதிகளவில் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பெரம்பூர் தொகுதியில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவேன்.அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் நன்கு கவனித்து வாக்களிக்க வேண்டும். இதில் பெண்களின் கஷ்டங்களை உணர்ந்து ஒவ்வொரு வீட்டிற்கும் வாஷிங்மெஷின் தர அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. தொகுதி மக்களின்  பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்’ என்றார். பிரச்சாரத்தின் போது அதிமுக கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Related Stories: