சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். பாமகவின் ஸ்லீப்பர் செல் ஆக கே.பி.முனுசாமி இருக்கிறார் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ெதரிவித்தார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையும், கேட்ட தொகுதிகளையும் வழங்க அதிமுக தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொண்டர்களின் கருத்துகளை அனைத்து மாவட்ட செயலாளர்களும் விஜயகாந்த்திடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாங்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளும் கிடைக்காததால் அதிமுக-பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.