புதுடெல்லி: பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜ தேசிய செயல் தலைவராக நிதின் நபின் கடந்த ஆண்டு டிச.14ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து பா.ஜ தேசிய தலைவர் தேர்வு ஜன.20ஆம் தேதி நடைபெற உள்ளது. செயல் தலைவர் நிதின் நபின் ஜனவரி 19 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளார். அவரைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால் அவர் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
