அரசின் ரகசிய தகவல்களை உளவு பார்ப்பதாக புகார் : சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட மத்திய அரசு திட்டம்!!

டெல்லி : சீன மற்றும் பிற நட்பு அல்லாத நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொலைத்தொடர்பு நெட்வேர்க் கருவிகளை நிறுவ ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சீன தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான ஹுவேவின் செயல்பாடுகளில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. சீனத் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மூலம் அரசின் ரகசிய தகவல்கள் கடத்தப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஹுவே நிறுவனம் தங்கள் நாட்டு இணைய பாதுகாப்பு மற்றும் பணி உரிமை சட்டங்களுக்கு இணைங்கவில்லை என்று அமெரிக்காவும் கூறியது. இந்த நிலையில், இந்தியாவில் தொலைத்தொடர்பு நெட்வேர்க் கருவிகளை அமைத்து வரும் அந்நிய நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு கடிவாளம் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி, தேசிய பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களின்படி தொலைத்தொடர்பு துறையின் உரிமம் வழங்கும் விதிமுறைகளில் மத்திய அரசு விரைவில் திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறது.

துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் இனி தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த குழுவில் பாதுகாப்பு, தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த குழு நாட்டின் தொலைத்தொடர்பு நெட்வேர்க்கிங் நிறுவனங்கள் ஆன நம்பகமான ஆதாரங்கள் மற்றும் நம்பகமான தயாரிப்புகளின் பட்டியலை அரசுக்கு பரிந்துரைக்கும்.

Related Stories: