மகளிர் உரிமைகளுக்காக அயராது உழைப்போம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சூளுரை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:  இன்று இந்திய அளவில், தமிழக மகளிர் முதன்மை இடத்தில் சாதனை படைத்து வருவதற்கு, திராவிட இயக்கம் அடித்தளம் அமைத்துத் தந்தது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான டாக்டர் முத்துலெட்சுமி நிறுவிய அடையாறு புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத்தை, டாக்டர் சாந்தா சீரும் சிறப்புமாக வழிநடத்திப் பெருமை சேர்த்து இருக்கின்றார்.

உலகில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களில் இந்தியாவில் இந்திரா காந்தி, பிலிப்பைன்சில் கொரசான் அகினோ, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா, இந்தோனேசியாவில் மேகவதி என ஆசிய நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் பெரும் புரட்சி செய்தனர். ஐரோப்பாவின் பல நாடுகளில், பெண்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் பொறுப்புகளை வகித்து இருக்கின்றார்கள். மகளிர் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், அயராது  தளராது நாளும் உழைப்போம் என சூளுரை மேற்கொள்வோம்.

Related Stories: