கேரள லாட்டரியில் மேற்கு வங்க தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் பரிசு

திருவனந்தபுரம்: மேற்கு  வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதிபா மண்டல் (40). இவர்  திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர்  வாங்கிய கேரள அரசின் காருண்யா பிளஸ் லாட்டரியில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ளது. இவருக்கு வங்கி கணக்கு கிடையாது என்பதால் லாட்டரி  சீட்டை என்ன செய்வது என தெரியாமல் இருந்தார். நேற்று காவல் நிலையம்  சென்று போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு  தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் வங்கிக் கணக்கு தொடங்கி, டெபாசிட் செய்ய உதவுகின்றனர்.

Related Stories:

>