கப் சிப் ஆன ஆம் ஆத்மி

டெல்லியில் தொடங்கி, ஹரியானா, கோவா, பஞ்சாப் மாநில தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியது ஆம் ஆத்மி கட்சி.  தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆம் ஆத்மி அடக்கியே வாசிக்கிறது. போட்டியிட்ட இடங்களில் எல்லாம் மிக மோசமான முறையில் தோல்வியை தழுவியதும் இதற்கு காரணம் ஆகும். தமிழக அளவில் நிலவி வந்த கோஷ்டி பூசல்கள் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. மூன்று பிரிவுகளாக கட்சி பல இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அளவிலும் போதிய அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பாடுகள் இல்லை. டெல்லியில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி, நாடு முழுவதும் கிளைகளை ஏற்படுத்தி கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் பல மாநிலங்களிலும் கப் சிப் ஆகிப்போயுள்ளது. இது போதாதென்று தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது என்று அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பற்றி அந்த கட்சி பேசி வந்தது. இப்போது திடீரென கெஜ்ரிவாலின் அறிவிப்பால் கமல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>