மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதி மீறல் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.

இதையடுத்து 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்ட மோடி புகைப்படத்துடன் கூடிய பேனர்களை அகற்றுமாறு மேற்கு வங்க தலைமை தேர்தல் அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்று ட்விட்டரில் பல்வேறு தரப்பினும் பதிவிட்டுள்ளனர். பெட்ரோல் பங்கில் இருந்து மோடி பதாகைகள் அகற்றப்பட்ட புகைப்படங்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி படத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவற்றை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories:

>