சோதனை சாவடிகளை மூடக்கோரி மனு

சாம்ராஜ்நகர், மார்ச்4:கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கர்நாடக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளை மூடக்கோரி கர்நாடக சேனா படை சங்கத்தினர் மாவட்ட துணை கலெக்டர் கார்த்தியாயினிடம் மனு அளித்தனர்.  நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கர்நாடகம் உள்பட சில மாநிலங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர கர்நாடக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளை மூட முதல்வர் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடக சேனா படை சங்கத்தினர் மாவட்ட உதவி கலெக்டர் கார்த்தியாயினியிடம் மனு அளித்தனர்.

Related Stories:

>