அடுத்த ஆண்டில் புலிகள் கணக்கெடுப்பு: இயக்குனர் நடேஷ் தகவல்

சாம்ராஜ்நகர்: கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள புலிகள் சரணாலய பகுதிகளில் வரும் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் ஒரே நாளில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பண்டிபுரா புலிகள் சரணாலய இயக்குனர் எஸ்.ஆர்.நடேஷ் தெரிவித்தார்.

தென்னிந்தியாவை சேர்ந்த கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநில வனத்துறை உயர் அதிகாரிகளின் கூட்டம் தமிழ்நாடு ஊட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பண்டிபுரா புலிகள் சரணாலய இயக்குனர் எஸ்.ஆர்.நடேஷ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

 

அதன்படி கர்நாடகாவில் உள்ள பண்டிபுரா வனசரகத்திற்குட்பட்ட 13 இடங்களில் 25 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக வனப்பகுதிகளில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் 2 சதுர கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்காக 1500 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. புலிகள் கணக்கெடுப்பு முடிந்ததும் அதன் அறிக்கையை தேசிய புலிகள் பாதுகாப்பு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: