1,217 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மாமரங்களில் மஞ்சள் நோய் தாக்குதல்: விவசாயிகள் பாதிப்பு

மங்களூரு: தென்கனரா மாவட்டத்தில் சுமார் 1217.38 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மா மரங்களின் இலைகளில் மஞ்சள் இலை நோய் தாக்கியதில் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.  தென்கனரா மாவட்டத்தில் கர்நாடக மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்த மறு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் சீனிவாச பூஜாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரி ஒருவர் கூறுகையில், சுமார் 1217.38 ஹெக்டேர் பரப்பளவில் மாமரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இலைகளில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. இதனால் 5,588 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவித்தார்.  மேலும் நோயை சரிசெய்ய தீர்வு ஏதும் கிடைக்கவில்லை, இதனால் விவசாயிகள் மாற்று பயிர் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  சிக்கமகளூரு மாவட்டத்தின் கொப்பா, சிருங்கேரி மற்றும் என்.ஆர்.புரா தாலுகாக்களிலும் உள்ள தோட்டங்களை நோய் தாக்கியது என்று சுட்டிக்காட்டிய புத்தூர் எம்.எல்.ஏ சஞ்சீவா மாதந்தூர் மற்றும் எம்.எல்.சி போஜே கவுடா ஆகியோர் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.  முதல்வரிடம் இதுகுறித்து கூறி நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சீனிவாச பூஜாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Related Stories:

>