சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு..!!

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தொடங்கியிருக்கிறது. எதிர்நோக்கி வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் எடுக்கப்படக்கூடிய முக்கிய முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே கட்சி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அடைப்படையில் இன்று கூட்டமானது ராதிகா, சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. பொதுகுழு கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தின் வாயிலாக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வு நடத்தப்படவிருந்தது.

அதன் அடைப்படையில் நடைபெற்ற கூட்டத்தில் சரத்குமார் தவிர வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடாததால் மீண்டும் சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பதவி பிரமாணமும் செய்துள்ளார். புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக A.N. சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

Related Stories: