கிரேட்டர் நொய்டாவில் போலீசாரின் என்கவுன்டரில் சிக்கிய ‘‘சீரியல் ரேப்பிஸ்ட்’’

நொய்டா: பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த வரும், ”சீரியல் ரேப்பிஸ்ட்” ஆகவும் போலீசாரால் அடையாளம் காணப்பட்ட நபரை உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த என்கவுன்டரில் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தின் சூரஜ்பூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் கடந்த மாதம் 25ம் தேதி கொடுத்த பாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரை விசாரித்தனர். அப்போது தான், பெண் தெரிவித்த குற்றவாளி ஏற்கனவே இதேபோன்று பல்வேறு பலாத்கார புகார்களில் சிக்கியவர் என்பது தெரிவந்தது. இதையடுத்து, சீரியல் ரேப்பிஸ்ட் ஆக அடையாளம் காணப்பட்ட அந்த நபரை போலீசார் தேடி வந்தனர்.

குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்று பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதற்குள்ளாகவே மீண்டும் தன் கைவரிசையை காட்டியுள்ளார். இந்நிலையில், போலிசார் தனிக்குழுக்களை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர். அப்போது, திங்களன்று இரவு கிரேட்டர் நொய்டா ஆணையம் அலுவலகம் அருகே இருப்பது தெரியவந்து போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் அவனது காலில் குண்டு பாய்ந்து சரிந்தான். இதையடுத்து அவனை மடக்கி போலிசார் கைது செய்தததாக துணை கமிஷனர்(பெண்கள் பாதுகாப்பு) விருந்தா சுக்லா தெரிவித்தார்.

மேலும், போலீசாரின் மற்றொரு குழுவினர், கைது செய்யப்பட்ட அந்த சீரியல் ரேப்பிஸ்டை தேடி அவனது சொந்த கிராமமான ஹமிர்பூருக்கு சென்றனர். ஆனாலும், வேறொரு குழுவினனரின் துப்பாக்கி சூட்டில் நேற்று முன்தினம் சிக்கிக்கொண்டான். கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தருவோம் என்றும் கமிஷனர் தெரிவித்தார். அவனிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, சில தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தற்போது குண்டு காயத்திற்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

Related Stories: