அதிமுகவின் விருப்ப மனு பெறும் நாள் குறைப்பு 3ம் தேதிக்குள் வழங்க வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் நாளைக்குள் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடந்த மாதம் 24ம் தேதி முதல் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் வேட்பாகளாக போட்டியிட விரும்புகிறவர்களுக்கு விருப்ப மனு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு 3ம் தேதி (நாளை) வரை மட்டுமே விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த காலக்கெடு எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>