பாஜகவுடன் கைகோர்க்க மம்தா தயங்கமாட்டார்.. பாஜக, திரிணாமுல்-ஐ ஒரு சேரத் தோற்கடிப்போம் : காங்கிரஸ், இடதுசாரி மெகா கூட்டணி சூளுரை

கொல்கத்தா : கொல்கத்தாவில் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க  சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரசையும் பாஜகவையும் வீழ்த்தும் பொருட்டு எதிர் எதிர் துருவங்களாக இருந்த இடது சாரிகளும் காங்கிரசும் கை கோர்த்துள்ளன.

கொல்கத்தாவில் இடது சாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து நடத்திய பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். மேற்கு வங்க  சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே இருமுனை போட்டி நிலவும் என்ற கணிப்புகளை இந்த பொதுக் கூட்டம் மாற்றி அமைத்துள்ளது. கொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை உருவானால், பாஜகவுடன் கைகோர்க்க மம்தா தயங்கமாட்டார் என்பதால் இரு கட்சிகளையும் ஒரு சேர தோற்கடிக்க இடதுசாரி - காங்கிரஸ் மெகா கூட்டணி உறுதி பூண்டுள்ளது. எனினும் தொகுதி பங்கீட்டில் தொடக்க நிலையிலேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பாடு இருப்பது கவலை தருவதாக இந்திய மதசார்பற்ற முன்னணி தெரிவித்துள்ளது. 

Related Stories:

>