வருவாய் அதிகரிக்க திட்டமில்லை, மத்திய அரசிடம் நிதி கேட்கவில்லை

மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டு பட்ஜெட்டுகளும் ஒரே மாதிரி தான் இருக்கும். மத்திய அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு ஒப்படைத்து அதன்மூலம் நிதியை கொண்டுவந்து அதை வைத்து திட்டங்களை அறிவித்தார்கள். மாநில அரசும் அதுபோன்று தான் செய்துள்ளார்கள். கொரோனா பேரிடர் நேரம் மட்டும் இல்லாமல் தேர்தல் நேரத்தில் நலத்திட்டங்களை அரசு அறிவித்துதான் ஆக வேண்டும். இந்த பட்ஜெட் சாத்தியமா என்று பார்த்தால், ஜி.எஸ்.டி வரியை நீங்கள் எடுத்துவிட்டு எங்களுக்கு கொடுங்கள் என மத்திய அரசு கூறியிருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்து இது நடைமுறைக்கு வந்துள்ளது. இப்படி பார்க்கும் போது இது மாநிலத்திற்கு வருவாயை சற்று அதிகரிக்கும். இதேபோல், தமிழகத்தில் டிரஸ்ட் பதிவு நடைமுறையை தற்போது கொண்டுவருகிறார்கள். இதற்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் என்ற ஒன்றை அறிவித்துள்ளார்கள். இது இன்னும் சட்டமாக ஆக்கப்படவில்லை. இது சட்டமாக ஆக்கப்படும் போது தமிழகத்தில் உள்ள ஏராளமான டிரஸ்ட் மூலமாக வருவாய் வரவும் வாய்ப்புள்ளது. இப்படி சட்டமாக்கப்படும் போது ஒன்று வருவாய் வரும். இல்லை என்றால் இங்கு இருக்கும் டிரஸ்ட் அருகாமையில் உள்ள மாநிலங்களுக்கு சென்றுவிடலாம்.

தொழில் வளர்ச்சியை பொறுத்தவரையில் கூடுதலாக முன்னேற்பாடுகளை எடுத்திருக்க வேண்டும். இதனால், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் அதிகரித்திருக்கும். நலத்திட்டங்களை இவர்களால் கடன் வாங்கி மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். ஏனென்றால் நமக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய வருவாய் எல்லாம் முழுமையாக வராமல் தடைபட்டுள்ளது. இதை அரசு கேட்டுப்பெறவில்லை. பட்ஜெட்டில் அறிவித்த நலத்திட்டங்களை எல்லாம் அரசு முழுமையாக நிறைவேற்றுமா என்றால் அது கேள்விக்குறி தான். ஆட்சி முடியும் நேரத்தில் கஜானாவை காலி செய்துள்ளார்கள். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பலதரப்பட்ட மக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள். எனவே, அதுகுறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது உள்ள சூழலில் வருவாய் என்பது டாஸ்மாக் மற்றும் பெட்ரோல், டீசல் மூலமாக மட்டுமே அரசுக்கு வருகிறது.

எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது சம்பந்தமாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது பெரிதும் எதிர்பார்க்கபட்டது. ஆனால், இறுதியில் ஏமாற்றம் அடைந்துள்ளோம். மாநில அரசு விலையை குறைக்கவில்லை என்றாலும் மத்திய அரசிடம் விலையை குறைக்க அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கிடைப்பதில்லை. இதில், பீகார், ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்களை மாநில அரசின் வேலைகளில் அமர்த்துகிறார்கள். எனவே, வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை என்று அறிவித்திருக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் வருவாய் அதிகரிப்பு, விளையாட்டு மேம்பாடு ஆகியற்றிற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை.

இளைஞர்களின் வேலைவாய்ப்பும்  அதிகரித்திருக்கும். நலத்திட்டங்களை இவர்களால் கடன் வாங்கி மட்டுமே  சாத்தியப்படுத்த முடியும். ஏனென்றால் நமக்கு மத்திய அரசிடம் இருந்து  வரவேண்டிய வருவாய் எல்லாம் முழுமையாக வராமல் தடைபட்டுள்ளது. இதை அரசு  கேட்டுப்பெறவில்லை. பட்ஜெட்டில் அறிவித்த நலத்திட்டங்களை எல்லாம் அரசு  முழுமையாக நிறைவேற்றுமா என்றால் அது கேள்விக்குறி தான். 

Related Stories: