வாடகைக்கு வீடுகூட தரமாட்டேன்றாங்க...!கிருஷ்ணசாமி புலம்பல்

‘இதுநாள் வரைக்கும் எஸ்.சி., எஸ்.சி.ன்னு சாயம் பூசினது போதும்டா சாமீ..,  இனிமே எங்களை  எஸ்.சி.ன்னு அழைக்காதீங்க’ என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை  பிரஸ்மீட்டில் கொந்தளித்து விட்டார். எஸ்.சி.  என்ற  அடைமொழி இருப்பதால் சென்னையில் வாடகைக்குகூட எங்கள் மக்களுக்கு வீடு தர  மறுக்கிறார்கள் என்றார். எஸ்.சி. என்ற அடைமொழி வேண்டாம் என்றால், நீங்கள் எஸ்.சி. தொகுதியில் மட்டும் போட்டியிடுவது ஏன்? என்ற கேள்வி  நச்சென விழுந்தது. சுதாரித்த அவர், ‘தொகுதிக்குள் சில கிரவுண்ட்  ஒர்க் செய்து வைத்துள்ளோம். அதனால், அங்கு  போட்டியிட விரும்புகிறோம். இனி, வரும் காலங்களில் எந்த தொகுதியாக  இருந்தாலும் சரி, ேபாட்டியிட தயங்க மாட்டோம்’  என்றார்.

Related Stories:

>