மநீம கூட்டணியில் நான்தான் முதல்வர் வேட்பாளர்: கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதுபெரும் அரசியல் செயற்பாட்டாளர் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர் வரும் தேர்தலில் போட்டியிடுவார். அதோடு, சமூகப் பணியாற்றி வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவில்  தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மார்ச் 1ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. எனது தலைமையிலான குழுவினர் தேர்வு செய்கிறார்கள். 7ம் தேதி முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால், நாங்கள் நடத்த  உத்தேசித்து இருந்த தேர்தல் மாநாட்டு பணிகளை தேர்தல் பணியாக மாற்றி இருக்கிறோம். நான் வரும் 3ம் தேதி முதல் மீண்டும் பிரசாரம் தொடங்குகிறேன். நான்தான் முதல்வர் வேட்பாளர் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முடிவு. நல்ல  கூட்டணி அமையும்போது அதில் நாங்கள் சமரசமும் செய்துகொள்வோம்.தேர்தல் செலவுக்கு நாங்களும் நிதி திரட்டுவோம். அது மேஜைக்கு மேலாக இருக்கும், கீழாக இருக்காது. அந்தப் பணத்தை சட்டத்துக்கு உட்பட்டு செலவு செய்வோம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Related Stories:

>