நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

பல்லாரி:பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டை தாலுகா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் யுவராஜ் (11), வேனு (10). இவர்கள் நேற்று காலை சித்தவாடி ஹொசூரு சாலையில் உள்ள ராய கால்வாயில் குளிக்க சென்றனர்.  அங்கு குளித்துக்கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்கள் ெவகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாமல் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் இவர்களை தேடிக்கொண்டு கால்வாய் அருகே சென்றனர். அப்போது இருவரும் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து ஹொசப்பேட்டை ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>