பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்குள் மோதல்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருவேறு ரவுடிகள் கும்பல் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அம்பரீஷ் என்ற ரவுடியை கூட்டாளிகளுடன் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறைக்குள் இருந்த மற்றொரு கும்பல் அம்பரீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அம்பரீஷிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறைத்துறை அதிகாரிகள் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறினர். இறுதியாக காயமடைந்த அம்பரீஷை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சிறைக்கு வெளியேயும் இதே கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த பின்னரும், அதேபோன்று முன்விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக தெரியவந்தது. இந்த தாக்குதல் குறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>