இந்தியா- மொரீசியஸ் இடையே 730 கோடியில் ராணுவ ஒப்பந்தம்

போர்ட் லூயிஸ்: இந்தியா- மொரீசியஸ் இடையே   730 கோடியில் ராணுவக் கடன் வரம்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு, மொரீசியஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம்  மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம், மாலத்தீவு சென்ற அவர் அந்நாட்டு அதிபர் இப்ராகிம் சோலியை சந்தித்து ராணுவ திட்டங்களுக்கான ₹362 கோடி மதிப்பு கடன் வரம்புக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், நேற்று மொரீசியஸ்  சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மொரீசியஸ் நாட்டின் கடலோர காவல் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், அதற்கான துருவ் ஹெலிகாப்டர், டோர்னியர் விமானங்களை  வழங்குவதற்கான கடிதங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.

இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் அவரது டிவிட்டரில், இரு நாடுகளும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. அதன்படி, மொரீசியஸ் நாட்டிற்கு தேவையான ராணுவ தளவாடங்களை  வாங்குவதற்காக  726 கோடிக்கு ராணுவ கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், பெரிய முதலீடுகளை கொண்ட வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், சீரழிந்த பொருளாதாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று  கூறியுள்ளார்.

Related Stories: