மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் முதல்வர் மம்தா உறவினர் வீட்டில் சிபிஐ விசாரணை: மருமகனின் மனைவி இன்று ஆஜர்

கொல்கத்தா:  நிலக்கரி மோசடி தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இன்று மம்தாவின் மருமகனின் மனைவியிடம் இன்று விசாரணை நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் நிலக்கரி மோசடி தொடர்பாக கடந்த நவம்பரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதர் மகனும், டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி  ருஜிரா மற்றும் அவரது தங்கை மேனகா கம்பீருக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றஞ்சாட்டி இருந்தது. சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ருஜிரா மற்றும் அவரது தங்கை மேனகாவுக்கு நேற்று முன்தினம் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.

 

இதைத்தொடர்ந்து சிபிஐ நோட்டீஸ்க்கு பதிலளித்த ருஜிதா, தனது கடிதத்தில், ‘‘என்ன காரணத்துக்காக என்னிடம் விசாரணை மற்றும் கேள்வி கேட்க இருக்கறீர்கள் என்பது எனக்கு தெரியாது. சிபிஐ அதிகாரிகள் செவ்வாய் கிழமை காலை 11  மணி முதல் மாலை 3 மணி வரை எனது வீட்டிற்கு வந்து விசாரணை செய்து கொள்ளலாம். நீங்கள் எப்போது வருவீர்கள் என்பது குறித்து தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். நேற்று முன்தினம் நோட்டீஸ்  வழங்கப்பட்ட நிலையில் நேற்று காலை  ருஜிதாவின் சகோதரி மேனகா காம்பீரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கொல்கத்தாவில் உள்ள மேனகா வீட்டிற்கு சென்ற 2 பெண் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் நிலக்கரி மோசடி  தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

Related Stories: