குடும்பப் பரம்பரை என்பது இதுதான் :.. உங்களுக்கு தெரியுமா?

*குடும்பப் பரம்பரை என்பது இதுதான் :

ஆண்பால் - பரன்  * சேயோன்  * ஓட்டன்  * பூட்டன்  * பாட்டன்  * அப்பா  * நாம்  * மகன்  * பேரன்  * கொள்ளுப் பேரன்  * எள்ளுப் பேரன்

பெண்பால் -  பரை  * சேயோள்  * ஓட்டி  * பூட்டி  * பாட்டி  * தாய்  * நாம்  * மகள்  * பேத்தி  * கொள்ளுப் பேத்தி  *எள்ளுப் பேத்தி

*வெங்காயம் வெட்டும்போது பபிள்கம் மென்றுக் கொண்டிருந்தால் கண்ணீர் வராது.

*இந்தியாவின் தேசிய கீதம் மட்டுமல்ல. பங்களாதேஷின் தேசிய கீதத்தை இயற்றியவரும் நம்ம ரவீந்திரநாத் தாகூர்தான். இலங்கையின் தேசியக் கீதத்திலும் தாகூருக்கு பங்குண்டு.

** 7,686,369,774,870 × 2,465,099,745,779 = ? விடை என்னவென்று கால்குலேட்டரை தொடாமல் மனசுக்குள் கணக்கு போட்டு இதற்கு விடை சொல்ல முடியுமா? ஹ்யூமன் கால்குலேட்டர் சகுந்தலாதேவி 28 நொடிகளில் இதற்கு சரியான விடை சொன்னார்.

* உலகெங்கும் சக்கைப்போடு போடும் நான்வெஜ் ஐட்டமான ‘சிக்கன் 65’ உருவானது நம்ம சென்னையில்தான். நகரில் புகழ்பெற்ற புஹாரி ஹோட்டலில் 1965ஆம் ஆண்டு அறிமுகப்பட்டுத்தப்பட்ட சைட்டிஷ் இது. ‘65’ என்பது அது உருவாக்கப்பட்ட ஆண்டினைதான் குறிக்கிறது.

*காந்தியாக நடித்து ஆஸ்கர் விருது பெற்ற பிரிட்டிஷ் நடிகர் பென் கிங்ஸ்லியின் உண்மையான பெயர் கிருஷ்ணா பண்டிட் பான்ஜி. அவரது முன்னோர் குஜராத்திகள்.

*டெல்லி, மெட்ராஸ், சேலம் என்கிற பெயர்களில் மூன்று ஊர்கள் அமெரிக்காவில் இருக்கின்றன.

*தாஜ்மஹால் காதல் சின்னம்தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஷாஜஹானுக்கு ஏழு மனைவிகள். அதில் நான்காவது மனைவிதான் மும்தாஜ். மும்தாஜை அடைவதற்காக அவரது கணவரை கொன்றார் ஷாஜஹான். தன்னுடைய பதினான்காவது பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால்தான் மும்தாஜ் உயிரிழந்தார். மும்தாஜின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரியை மணந்தார் ஷாஜஹான்.

* ‘வெங்கடநரசிம்மராஜூவாரிபேட்டா’ என்பது தமிழக - ஆந்திர எல்லையோரம் இருக்கும் ஓர் ஊர். இந்த ஊரின் பேரை சொல்லி ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்குவதற்குள் தாவூ தீர்ந்துவிடுகிறதாம் அவ்வூர் மக்களுக்கு.

Related Stories: