புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமாரின் ராஜினாமா கடிதம் ஏற்பு: சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமாரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து தகவல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி: புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் உள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் முதலமைச்சர் நாரயணசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று மதியம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து வலியுறுத்த அதிமுக முடிவு செய்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமாரின் ராஜினாமா கடிதம் ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப்பில் மல்லாடி கிருஷ்ணராவ் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். துரித தபால் மூலமாக தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக கூறியுள்ளார். மல்லாடி கிருஷ்ணராவ் ராஜினாவும் ஏற்கப்படும் என கூறினார்.

Related Stories: