குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி..! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

குஜராத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா உறுதி செய்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழந்தார். குஜராத் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அப்போது திடீரென மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார். ஆனால் முதல்-மந்திரியின் அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர். தொடர்ந்து முதல்-மந்திரிக்கு மேடையில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

இதனிடையே முதல்-மந்திரி விஜய் ரூபானியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இந்நிலையில் குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் ரூபானி தற்போது நலமுடன் உள்ளார் என்றும் மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: