பிளாஸ்டிக் கிணற்றில் தண்ணீரை சேமித்து விவசாய பணி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர் வீணாகாத பிளாஸ்டிக் கிணறுகளை அதிகளவு விவசாயிகள் அமைத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்ற போதிலும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பெய்யாது. மேலும், இச்சமயங்களில் துவக்கத்தில் மூன்று மாதம் பனிப் பொழிவும் காணப்படும். இதனால், வனங்கள் வறண்டு விடும். புல்வெளிகளும் காய்ந்து விடும். ஊற்று நீர் அதிகமாக இருக்காது. இச்சமயங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக காணப்படும். குறிப்பாக, விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் இருக்காது.

மேலும், இது போன்று விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் சாதாரண கிணறுகளில் சேமித்து வைத்தால், ஓரிரு நாட்களில் காணாமல் போய்விடுகிறது. இதனால், தண்ணீர் வீணாகாமல் இருக்க தற்போது பெரும்பாலான காய்கறி தோட்டங்களில் விவசாயிகள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு கிணறுகள் அமைக்கின்றனர். இது போன்ற கிணறுகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் வீணாவதில்லை. மேலும், தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்கின்றனர். இதனால், பெரும்பாலான விவசாயிகள் தற்போது தங்களது தோட்டங்களில் பிளாஸ்டிக் கிணறுகளை அதிகளவு அமைத்து வருகின்றனர்.

Related Stories: